ஆந்திராவிலிருந்து வந்த ஆந்திர அரசு
பேருந்து மூன்றை வேலூர் வட்டார
போக்குவரத்து அலுவலர் ஆய்வு
செய்தார். அப்போது சரியாக ஆவணங்கள்
இல்லை என கூறி மூன்று அரசு
பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பேருந்துகளை விடுவிக்க கோரி
அதிகாரிகள் ஆவணங்களை
சமர்பித்தபோதும் விடுவிக்கப்படவில்லை.
இதனால் ஆந்திர அரசு தடலாடியாக
வேலூர்,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,சேலம்
உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலம்
குப்பம் மற்றும் சித்தூர் பலமநேரி நகரிபுத்தூர்,
திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற 40க்கும்
மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இதனால் தமிழக அரசு பொங்கலுக்கு
இயக்கும் பேருந்துகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது
மேலும் தமிழக பேருந்துகளையும் தொடர்ந்து
இன்றும் பறிமுதல் செய்யவுள்ளதாக
ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏட்டிக்கு போட்டியாக பேருந்துகளை
பறிமுதல் செய்யும் நடவடிக்கையால்
பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.#Transport #Bus #Tamilnadu #Andhar
ਹੋਮ தமிழக ஆந்திர அதிகாரிகளிடையே பிரச்னை
ਟਿੱਪਣੀਆਂ